விராத் கோலி எனக்கு பிடித்த வீரர்தான், ஆனால்...: இழுக்கிறார் ஷாகித் அப்ரிதி!

இந்திய வீரர் விராத் கோலி எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி தெரிவித்தார்.


இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று டி20, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டித் தொடர்களில் அங்கு பங்கேற்கும் இந்திய அணியை, விராத் கோலி வழி நடத்துகிறார். பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டி20 போட்டி யில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரண்டாவது போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.


இந்நிலையில் விராத் கோலியின் கேப்டன்ஷிப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி கருத்து தெரிவித் துள்ளார்.


அவர் கூறும்போது, ‘எனக்குப் பிடித்த வீரர்களில் ஒருவர், விராத் கோலி. அவரது ஆட்டம் எனக்கு பிடிக்கும். இருந்தாலும் கேப்டனாக அவர் இன் னும் முன்னேற வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து. இந்தியா -ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் அற்புதமான ஒன்றாக இருக்கப் போகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியா முயலும். அதற்கு, ஓர் அணியாக செயல்பட வேண்டியது முக்கியம்’ என் றார்.


சுனில் கவாஸ்கர் கூறும்போது, டி20 போட்டியில் மூன்றாவது வீரராக கே.எல்.ராகுலை களமிறக்க வேண்டியதில்லை என்றும் அந்த இடம் கோலிக்குரியதுதான் என்றும் அவர்தான் அந்த இடத்தில் இறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


(மைக்கேல் கிளார்க்)


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். விராத் கோலி, மூன்றாவது வீரராக களமிறங்கி கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும். அவர் தொடக்க ஆட்டக்காரராகக் கூட இறங்கலாம். ஆனால், பின் வரிசையில் இறங்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.