ஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் கருணாநிதி சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு அறிஞர் அண்ணா சிலையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை இன்று அப்புறப்படுத்தப்பட்டது. அண்ணா சிலையை புணரமைக்கப்பட்ட வெண்கல சிலையாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் கருணாநிதி சிலையும் ஒரே இடத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்துள்ளது.