மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோர வேண்டும் - சரத்குமார்


கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கூடுதல் நிவாரண நிதி கோர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

‘கஜா’ புயல் கடந்த 15-ஆம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி கடந்த 20-ஆம் தேதி செய்தார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர்.

முன்னதாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் நிவாரணத்திற்கு ரூ.15,000 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கூடுதல் நிவாரண நிதி கோர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.