“ நீதிமன்ற விசாரணைக்கே பாஜக முக்கியத்துவம் அளிக்கும்” - ராமர் கோயில் குறித்துஅமித்ஷா
தங்கள் சொந்த வழியில் சென்றிருந்தால், பாஜக எப்பொழுதோ ராமர் கோயிலை கட்டியிருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று அயோத்தியில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரண்டு லட்சம் பேர் அயோத்தியில் திரண்டதாக கூறப்படுகிறது. இதனால், அயோத்தியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதோடு, ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன் தினம் அயோத்திக்கு வருகை புரிந்தார். இரண்டு நாள் அயோத்தியில் இருந்த அவர் மடாதிபதிகளை சந்தித்து ராமர் கோயில் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த விவகாரத்தில் பாஜாக அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சித்தார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில் அமித்ஷா, “அயோத்தி விவகாரத்தில் பாஜக எப்பொழுதும் நீதிமன்றத்தின் விசாரணைக்கே முக்கியத்துவம் அளிக்கும். காங்கிரஸ் கட்சிதான் இந்த வழக்கை தாமதப்படுத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபில், அயோத்தி வழக்கை 2019 மக்களவை தேர்தலுக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ராகுல் காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்திருக்க முடியாது.
பொதுவாகவே, இவை சரியான வழிகள் அல்ல. ஜனவரி 22 ஆம் தேதி அடுத்தக்கட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வரை பாஜக காத்திருக்கும். உச்சநீதிமன்றம் விசாரிக்கட்டும். அதன் பிறகு பார்ப்போம். எங்கள் கைகளில் எதுவும் இல்லை. எங்களால் தேதியை முடிவு செய்ய முடியாது. நீதிமன்றத்தின் முடிவில்தான் உள்ளது” என்று கூறினார் அமித்ஷா.
‘டைம்ஸ் ஆப் இந்தியா’வுக்கு அளித்த பேட்டியில், “9 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கை, காங்கிரஸ் மேலும் தாமதப்படுத்துகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ராமர் கோயில் விவகாரத்தில் எங்களது நோக்கத்தை யாரும் சந்தேகிக்க முடியாது. சிவசேனாவை பொருத்தவரை இருவரும் வேறுபட்ட கட்சிகள், ஆனால், ஒரே கூட்டணியில் இருக்கிறோம். இருப்பினும், எங்கள் உறவில் எவ்வித உரசலும் இல்லை” என்றார்.