17 வருடங்களுக்கு பிறகு கவர்ச்சி நடிகை விசித்ரா எடுத்துள்ள முடிவு..!
தமிழ் சினிமாவில் 90களில் கவர்ச்சியில் கலக்கியவர் விசித்ரா. தலைவாசல்
படத்தில் அறிமுகமான அவர் அதன் பிறகு தேவர் மகன், ரசிகன், வீரா, முத்து
உள்பட பல படங்களில் நடித்துள்ளார், ஒரு பாடலுக்கும் நிறைய படங்களில்
ஆடியுள்ளார். கடைசியாக அவர் 2002ல் இரவு பாடகன் படத்தில் நடித்தார்.
அதன்
பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது அவர் மீண்டும் நடிக்க
வருகிறார். இதற்காக தனி போட்டோ ஷ¨ட் நடத்தி அதனை தயாரிப்பாளர்கள்,
இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர்
கூறியதாவது: கணவர், 3 மகன்கள் என குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக போய்க்
கொண்டிருக்கிறது. இப்போது மைசூரில் வசிக்கிறோம். ஓட்டல் நிர்வாகத்தை
கவனிக்கிறேன். மீண்டும் நடிக்க ஆர்வத்துடன் வந்துள்ளேன். என் படங்களை
இயக்கிய சில இயக்குனர்கள், நல்ல வேடம் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
என்கிறார்.