பைரவா வசூலை அடித்து ஓரம் கட்டிய காஞ்சனா 3..!
லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் காஞ்சனா-3 படம் திரைக்கு வந்தது.
இப்படம் சிட்டியில் எப்படி என்று தெரியவில்லை, பி, சி பகுதியில் அடித்து
நொறுக்குகின்றது.
இந்நிலையில் இப்படம் தற்போது விஜய்யின் பைரவா
படத்தின் தமிழக வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. ஆம், காஞ்சனா-3
தமிழகத்தில் மட்டும் ரூ 63 கோடி வசூலை தாண்டியுள்ளதாம்.
சில படங்களே நடித்த லாரன்ஸ் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளுவது சாதரண விஷயமில்லை.
மேலும்,
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மட்டும் வராமல் இருந்திருந்தால், கண்டிப்பாக
இப்படம் தமிழகத்தில் ரூ 80 கோடி வசூலை எட்டியிருக்கும் என கூறப்படுகின்றது.