பிக்பாஸ் சீசன் 3 - தொடங்கும் நாள் இது தான்..! - யார் யார் கலந்துகொள்கிறார்கள்.!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த நிகழ்ச்சியில் எண்டர்டெயின்ட்க்கு பஞ்சம் இருக்காது என்பதால் பல ரசிகர்கள் தொடர்ந்து பார்த்துவருகின்றனர். 

3வது சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அது ஜூன் 23ம் தேதி தான் துவங்குகிறது என்று ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், இந்தியா அணி விளையாடும் போட்டி இல்லாத ஞாயிற்றுக்கிழமையை தான் விஜய் டிவி தேர்ந்தெடுத்துள்ளது. 

அது உண்மையா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது தெரியும். முதல் சீசன் 25 ஜூன் 2017லும், இரண்டாவது சீசன் 17 ஜூன் 2018லும் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை, ஜாங்கிரி மதுமிதா மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொள்வது உறுதி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Blogger இயக்குவது.