காலியான பட்ஜெட் - அந்தரத்தில் தொங்கும் தளபதி 63 - வருத்தத்தில் தயாரிப்பு நிறுவனம் - என்ன காரணம்..?


நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் தளபதி-63 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா கதாநாயகியாகவும் விவேக், யோகிபாபு காமெடியன்களாகவும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படத்தின் பட்ஜெட்டில் இதுவரை 60 சதவீதம் செலவிடப்பட்டுவிட்டதாம். ஆனால் இந்நாள் வரை திட்டமிட்ட படப்பிடிப்பில் 30 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இன்னும் 70% படப்பிடிப்புகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருகப்பதால் கடும் மன வருத்தத்தில் படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதற்கு காரணமான முக்கிய மேனேஜர் ஒருவரை நீக்கிய பின்னரும் அதிகரிக்கும் பட்ஜெட்டை தடுக்க முடியாமல் தயாரிப்பு குழு கலக்கத்தில் உள்ளதாம். தற்சமயம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட பிரமாண்ட செட்டுகளே இந்த அதீத செலவுக்கு காரணம் என்றும் படக்குழுவின் ஒரு தரப்பு கூறி வருகிறது.
Blogger இயக்குவது.