தளபதி 63 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது..? - வெளியான தகவல் - விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்


அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் விஜய் வீல் சேரில் அமர்ந்திருக்கும் கால்பந்து மைதான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விஜய், அட்லி இயக்கத்தில் தளபதி 63 எனும் பெயரிடப்படாத படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 

சமீபத்தில் கூட, துணை நடிகை ஒருவர் அட்லி மீது புகார் கொடுத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் ஃபோகஸ் லைட் விழுந்ததில் மின் பணியாளர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், தளபதி 63 படத்தின் கால்பந்து மைதானம் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், விஜய் கழுத்தில்
செர்விகல் காலர் சப்போர்டை அணிந்திருப்பது போன்றும், வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்றும் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் ஜூன் 21ம் தேதி மாலை வெளியாகும் என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிடவுள்ளது விஜய் ரசியக்ர்களுக்கு டபுள் ட்ரீட் என்று தான் சொல்லவேண்டும்.
Blogger இயக்குவது.