இதற்காக தான் அரசியலில் இருந்து விலகினேன் - குழப்பும் காயத்ரி ரகுராம்


சார்லிசாப்ளின், பரசுராம், விசில் என பல படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம். இவர் பல படங்களில் நடன மாஸ்டராகவும் பணியாற்றியுள்ளார். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரித்து வந்த காயத்ரி ரகுராம், பாஜகவிலும் இணைந்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் இவருக்கும் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் தான் அரசியலில் இருந்து விலகியிருக்கப் போவதாகவும், ஒரு இடைவெளி கொடுத்து அரசியல் கற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதையடுத்து காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று அவர் ஒரு அவசர செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நான் அரசியலை கற்றுக் கொள்வதற்காகத்தான் ஒரு இடைவெளி எடுக்கப்போவதாக சொன்னேன். ஆனால் பாஜகவை விட்டு விலகவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதில் நம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டால் தானே முடியும்..? இவர் என்ன வென்றால் விலகி நின்று நான் அரசியலை கற்றுக்கொள்ளப்போகிறேன் என்று கூறுகிறாரே என்று ரசிகர்கள் குழம்பித்தான் போயுள்ளனர். அது சரி, ஒன்பது கட்டங்களிலும் உச்சம் பெற்ற ஒருவன்...................
Blogger இயக்குவது.