நடிகர் விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால், நல்ல நடிகர் கிடையாது - பிரபலத்தின் பேச்சால் கடும் கோபத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவை தாண்டி கேரளா, ஆந்திரா என ரசிகர்களால் கொண்டாடப்படும்
ஒரு நடிகர் விஜய். இவர் தற்போது சென்னையில் தன்னுடைய 63வது பட
படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் விஜய்
குறித்து மலையாள நடிகர் சித்திக் பரபரப்பாக பேசியுள்ளார். ஒரு பேட்டியில்
அவர், மலையாள சினிமா அதிர்ஷ்டமடைந்தது மம்முட்டி, மோகன்லால் போன்ற சிறந்த
நடிகர்களை கொண்டது.
மற்ற மொழி, தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால்
அது வேறு கதையாக இருக்கும். விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால்
சிறந்த நடிகர் கிடையாது. கமல்ஹாசன் தான் நல்ல நடிகர், சூப்பர் ஸ்டார்
என்றார்.
அவரின் பேச்சுக்கு மெர்சல் படத்தில் முக்கிய வேடத்தில்
நடித்த ஹரீஷ் பெரடி பேஸ்புக் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் என்ன
எழுதியுள்ளார் என்றால், இளைய தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் மட்டுமில்லாது
சூப்பர் நடிகர். மற்ற சூப்பர் ஸ்டார்களை தாண்டி விஜய் மிகவும் நல்ல மனிதர்
என பதிவு செய்துள்ளார்.
ஹரிஷ் பெரடி சொன்னதை கேட்டு விஜய் ரசிகர்கள் ஆறுதல் அடைந்தாலும் சித்திக் மீது தங்களது கோபத்தை காட்டி வருகின்றனர்.