ஆடை என்பதே மானத்தை மறைக்க தானே - ஜெயம் ரவி பட நடிகையை விளாசும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே
பாலிவுட்டின் குயின் கங்கனா ரணாவத். இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர்.
மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து லைப் இன் எ மெட்ரோ, பேஷன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார்.
தமிழில், ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற படத்தில் நடித்தார். தானு வெட்ஸ் மனு, கிரிஷ்-3, குயின் போன்ற படங்கள் கங்கனாவின் நடிப்பை வேறொரு விதமாக வௌிச்சம் போட்டு காட்டியது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட்டின் குயினாக வலம் வருகிறார் கங்கனா.
பொதுவாகவே, விருதுவிழாக்களுக்கு செல்லும் போது கவர்ச்சியான உடையைஅணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு படு மோசமான உடையில் வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆடை என்பது மானத்தை மறைக்க தான். இப்படி பெண்ணழகை படம் போட்டு காட்டுவதற்கல்ல என்று கடுப்பு கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.