விட்டால் வீட்டிற்கு வந்து விடுவான் போல..! - போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த வாணி கபூர்..!
பிரபல நடிகை வாணி கபூர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தவர். அந்த
படத்தில் அவர் நானியுடன் லிப்கிஸ் காட்சியில் நடித்தது பரபரப்பாக
பேசப்பட்டது. மேலும் பல ஹிந்தி படங்களில் கவர்ச்சியான வேடங்களில் தற்போது
நடித்து வருகிறார் வாணி கபூர்.
இந்நிலையில் நேற்று அவர் காரில்
சென்றபோது பைக்கில் வந்த நபர் ஒருவர் இவரை பார்த்துவிட்டு, காரை விடாமல்
துரத்தியுள்ளார். கார் டிரைவர் வேகமாக ஓட்டி அந்த நபரிடம் இருந்து
தப்பியுள்ளனர்.
ஆனால் மீண்டும் திரும்பு வரும்போது அதே நபர்
வாணியிடம் பேச முயற்சித்து காரை பின்தொடர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான
வாணி கபூர் மும்பை போலீசில் புகார்அளித்துள்ளார். அந்த நபர் வீட்டிற்கே
வந்து விடுவார் என்கிற பயத்தில் நேராக போலீஸ் ஸ்டேஷனில் புகார்
அளித்துவிட்டு தான் வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார் அவர்.