ஒரு படத்திற்கு சிம்பு வாங்கும் சம்பளம் - அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா..?

நடிகர் சிம்பு லண்டனுக்கு சென்று உடல் எடையை குறைத்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

அடுத்து அவர் ஸ்டுடியோ கிறீன் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு 6 கோடி ருபாய் சம்பள அட்வான்ஸாக மட்டுமே பெற்றுள்ளாராம். மேலும் படத்தின் லாபத்தில் பெரிய பங்கு தரவேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளாராம் சிம்பு.

பாலிவுட் நடிகர்கள் மட்டுமே கடைபிடித்து வந்த இந்த நடைமுறையை தற்போது சிம்புவும் பின்பற்ற துவங்கியுள்ளார்.
Blogger இயக்குவது.