ஸ்டைலாக தெரிய லட்சங்களை வாரி இறைக்கும் வாரிசு நடிகை..!



பாலிவுட்டில், ஒவ்வொரு நடிகையும், ஒரு சீசனில் கோலோச்சுவது வழக்கம். பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்ற நடிகையருக்கு வயதாகி விட்டது. திருமணமும் முடிந்து விட்டது.

அவர்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், பாலிவுட் ரசிகர்களின் பார்வை, இளம் நடிகையரை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், இப்போது, பிரபல இயக்குனர் மகேஷ் பட்-டின் மகளான ஆலியா பட் காட்டில், அடைமழை பொழிகிறது. அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ, இல்லையோ, இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி என்பதால், தயாரிப்பாளர்கள் கூட்டம், அவரது வீட்டில் நிரம்பி வழிகிறது.



ஆலியா பட் நின்றால், நடந்தால், பேசினால் என, எல்லாமே செய்தியாகிறது.இதனால், தன்னை அழகாகவும், ஸ்டைலாகவும் காட்டுவதற்கு, பணத்தை தாராளமாக வாரி இறைக்கிறார், அவர். உடைகள், ஹேண்ட்பேக் போன்றவற்றுக்கு, பல லட்சங்களை செலவிடுகிறார். சமீபத்தில், லண்டன் சென்றபோது, அவர் வைத்திருந்த ஹேண்ட்பேக் விலை, 6 லட்சம் ரூபாயாம்.
Powered by Blogger.