பைரவா படத்தில் இயக்குனரை கேள்வி மேல் கேள்வி கேட்ட விஜய்..! - வெளியான உண்மை தகவல்..!
விஜய்யின் நடிப்பில் கடந்த 2017ல் வெளியாகியிருந்த படம் பைரவா. அழகிய
தமிழ் மகன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யை பரதன்
இயக்கியிருந்தார்.
கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் உதவி
இயக்குனராக பணியாற்றிய பாரதி செல்வன் என்பவர் இப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில்
நடந்த சம்பவங்களை பற்றி பேட்டி ஒன்றில் கூறினார்.
அதில், பரதன் சார்
தன்னுடைய ஒவ்வொரு காட்சிக்கும் வசனத்திற்கும் மிக வலுவான காரணம் இருக்க
வேண்டும் என்று நினைப்பவர். விஜய் சார் கேமிரா முன்னால் நடிப்பதற்கு முன்பு
இயக்குனரிடம் பல கேள்விகளை இப்பட ஷூட்டிங்கின் போது கேட்டார். பரதன்
சாரும் அக்கேள்வி ஒவ்வொன்றிற்கும் சளைக்காமல் பதிலளித்து அவரை சமாதானம்
படுத்துவார் என்றார்.