பல நடிகைகள் நடிக்க மறுத்த மோசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள ரம்யா கிருஷ்ணன்..!


சித்தார்த் ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க த்ரிஷா கமிட்டாகியுள்ளார். கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான அந்தாதுன் திரில்லர் படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சித்தார்த் – த்ரிஷா இணைகிறார்கள். 

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்த படத்தில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த ரோலில் சித்தார்த்தும், ராதிகா ஆப்தே ரோலில் த்ரிஷாவும் நடிக்கிறார்கள். இதுபோக படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரம் தபு கதாபாத்திரம்தான். 

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் அந்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் தமிழில் பல நடிகைகள் மறுத்துவிட்ட நிலையில், யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் ரம்யா கிருஷ்ணனுக்கு இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சித்தார்த் – த்ரிஷாவும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்தனர். அதன் பின்னர் தமிழில் அரண்மனை 2, தெலுங்கில் நுவோதஸ்தானே நுனோடோன்டனா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.