ஒரே இரவில் டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட பல விஜய் ரசிகர்கள் பக்கங்கள் - என்ன காரணம்..?


சமூக வலைத்தளங்களில் டிரென்டிங், யு டியுபில் நம்பர் 1 டிரென்டிங் ஆகியவற்றை நடிகர்களுக்காக செய்ய வைப்பதில் அவர்களுடைய ரசிகர்கள் பக்கங்கள்தான் முதன்மையாக இருக்கின்றன. அவர்கள் அபிமான நடிகரைப் பற்றிய தகவல் எது வெளியானாலும் அவற்றை உடனடியாக ஒரு ஹேஷ்டேக் வைத்து அவற்றை டிரென்டிங்கில் கொண்டு வருவதை ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களைப் பொருத்தவரையில் பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையில் இந்தப் பக்கங்களால்தான் அடிக்கடி மோதலும் உருவாகின்றன. சில சமயங்களில் அந்த மோதல் வரைமுறை இல்லாமலும் செல்கிறது.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் ஒரே இரவில் பல விஜய் ரசிகர்கள் பக்கங்களை டுவிட்டரில் இருந்து நீக்கியிருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இது குறித்து விஜய்யை வைத்து 'மெர்சல்' படத்தைத் தயாரித்த ஹேமா ருக்மணியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மீதமிருக்கும் ரசிகர்கள் பக்கங்கள் இனி அதிகமான கண்காணிப்பில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. யாராவது அந்தப் பக்கங்கள் குறித்து அதிகமாக 'ரிப்போர்ட்' கொடுத்தால் அவற்றை நீக்கும் வேலையை டுவிட்டர் நிறுவனம் செய்யவும் வாய்ப்புள்ளது. இது, அனைத்து சமூக வலைத்தளங்களிலும் நடக்கும் விஷயம்தான்.
Powered by Blogger.