கோடி ரூபாய் கொடுத்தாலும் அவரு கூட நான் நடிக்க மாட்டேன் - டாப் ஹீரோவை நிராகரித்த நடிகை காஜல் அகர்வால்...!


நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என மாற்றி மாற்றி பிஸியாக நடித்து வருகிறார். அவர் தற்போது குயின் ரீமேக், சீதா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். 

இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் ஷூட்டிங்கும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீதா என்ற தெலுங்கு படத்தின் கதையை இயக்குனர் தேஜா நீண்ட காலத்திற்கு முன்பே காஜலிடம் கூறியிருந்தாராம். ஹீரோ யார் என கேட்ட காஜலிடம் ஒரு டாப் ஹீரோவின் பெயரை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

எத்தனை கோடி கொடுத்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்கமாட்டேன் என உடனேயே மறுத்துவிட்டாராம் காஜல். அதன்பிறகு அதே கதையில் வேறொரு ஹீரோ - பெம்மல்கொண்ட ஸ்ரீனிவாஸ் வைத்து எடுக்க இயக்குனர் முடிவெடுத்து காஜலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தாராம்.

இது பற்றி ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் தேஜா காஜல் நிராகரித்த அந்த ஹீரோ யார் என்பதை குறிப்பிட மறுத்துவிட்டார்.
Blogger இயக்குவது.