பட வாய்ப்புக்காக படுக்கை - நடிகை பத்மப்ரியா கூறிய அதிர வைக்கும் தகவல்..!


'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' 'மிருகம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. எந்தப் பிரச்னைகளையும் துணிச்சலாக எதிர்கொள்கிறவர்.

தமிழ், மலையாளத்தில் வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்கெனவே பாதியில் விட்ட படிப்பைத் தொடர்ந்தார். பிறகு திருமணம் செய்துகொண்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.தன்னை கன்னத்தில் அறைந்த இயக்குனர் சாமியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தவர். 

திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் நடித்தே தீருவேன் என அடம்பிடிப்பதும் இல்லை அதேநேரத்தில் வருகிற நல்ல வாய்ப்புகளை நிராகரிப்பதும் இல்லை.நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு பிரச்சனைகள் குறித்து பத்மப்ரியா தற்போது கூறியிருப்பதாவது, 'ஒரு சினிமாவில் முக்கிய கதாபாத்திரம் கிடைக்கவேண்டும் என்றால் படுக்கையை பங்கிட வேண்டும், அதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும். 

படுக்கைக்கும் தயாரில்லை என்றால் சினிமாவாய்ப்பு இல்லாமல் போகும். புதிய நடிகைகளுக்கு மட்டும்தான் பாலியல் பிரச்சினை என்று நினைக்காதீர்கள். பெயரும், புகழும் கொண்டவர்களுக்குத்தான் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அதைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

அப்படி படுக்கையைப் பங்கிட்டவர், சினிமாவில் வெற்றியடைந்துவிடுவார் என்று உறுதியாக சொல்ல முடியுமா? இதுபோன்ற விஷயங்களை நான் தவிர்த்ததால், ஒதுக்கப்பட்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால்தான் நான் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்பது அவர்களுக்குத் தெரியும். நடிப்பைத் தவிர வேறு எதுவும் என்னிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும். 

அதனால் என்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்கள்.' என பத்மப்ரியா கூறியுள்ளார்.
Powered by Blogger.