இதனால் தான் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தேன் - உண்மையை போட்டு உடைத்த விஷ்ணு விஷால்..!


2011-ல் நடிகரும் இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்தாண்டு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நவம்பர் 13, 2018-ல் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது.

அதன்பிறகு விவாகரத்து குறித்து அறிக்கை மட்டும் வெளியிட்ட விஷ்ணு விஷால், விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம், எனது திருமணம். ஆனால், அதுவும் இப்போது இல்லை. என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். அப்போது இந்த பேட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம்பிக்கை குறைவாகவே இருப்பேன். என்னை, சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த்ததே இல்லை. எனது அப்பாவைப் பார்த்து, புத்திசாலியான என் சகோதரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வாழ்வில் மிஞ்சவே முடியாது என்றெல்லாம் நினைப்பேன்.

இந்த ஆளுமை என் வளர்ச்சியைத் தடுப்பதாக நம்பியதால், எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, 'நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை' என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன்.

நான், எனது துறையில் மிகக் கடினமாக உழைத்துள்ளேன். பலருக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீதியாக வருத்தத்தில்தான் இருக்கிறேன். ஆனால், வேலை எனது கவனத்தைத் திசை திருப்புகிறது. நான், எனது மகனைப் பற்றி நினைக்கிறேன். அவரையும், அவரது அம்மாவையும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.