நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா அனுப்பிய நோட்டிஸ்..! - என்ன காரணம்..???


நடிகர் விக்ரம் தற்போது தன் படங்களில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி தன் மகன் துருவ்வின் முதல் படமான ஆதித்ய வர்மா ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார். படத்தையே அவர் தான் இயக்குகிறார் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாலா இயக்கிய "வர்மா" படம் சுத்தமாக சரியில்லை என கூறி மொத்தமாக முழு படத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தற்போது மீண்டும் வேறு பெயரில் படமாக்கி வருகின்றனர்.

அந்த படத்தில் நான் இயக்கிய காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று தான் பாலா எச்சரித்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
Blogger இயக்குவது.