விஜய்யின் வீடியோ எடிட்டிங்கை பார்த்து வியந்த பிரபல நடிகர்..! - இதோ அந்த வீடியோ

விஜய்க்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் பல படங்களில் பாடல்களில் ஏதாவது ஒரு ஸ்பெஷலான ஸ்டெப் போட்டு காட்டியிருப்பார். அந்தளவுக்கு அவருக்கு அதில் ஆர்வம். 

அவரும் அதற்காக மிகவும் ரிஸ்க் எடுக்கக்கூடியவர். அவருடன் படங்களில் நடித்த நடிகைகள் கூட அவருக்கு இணையாக வேகமாக எங்களால் ஆடமுடியவில்லை என கூறியதுண்டு. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் இதை தன் பேட்டியில் சொல்லியிருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். 

 விஜய்யின் படங்களில் முக்கியமான ஒன்று திருமலை. இதில் தாம் தக்க தீம் தக்க என்ற பாடலில் அவரும் ராகவா லாரன்ஸும் இணைந்து ஆடியிருப்பார்கள். 

வேகமான நடன அசைவுகள் கொண்ட இப்பாடலை ரசிகர்கள் சிலர் நண்பனுக்கு கோவில் கட்டு என்ற பாடலுக்கு எடிட் செய்து வீடியோவை வெளியிட அதை ராகவா லாரன்ஸ் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

Blogger இயக்குவது.