இளமையில் விஜய்க்கு ஜோடியாகவும், பிறகு அண்ணியாகவும் நடித்த நடிகையின் தற்போதைய நிலை..!


நடிகை கௌசல்யா தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய ஹீரோயினாக இருந்தவர். விஜய் நடிப்பில் வெளியான ப்ரியமுடன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பிறகு, திருமலை படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க அவருக்கு அண்ணியாக நடித்தார். அதன் பின் படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லாமல் போனது. அவருக்கு வயதும் 35 ஐ கடந்து விட்டது. 

அண்மையில் அவருக்கு திருமணம் என செய்திகள் வைரலாக பரவியது. சில நாட்களில் அவர் எனக்கு இப்போதெல்லாம் திருமணம் இல்லை. திருமணம் குறித்த வந்த தகவல்கள் வெறும் வதந்தி என கூறினார். 

 திருமணமே வேண்டாம் என சொல்லி வந்த அவர் தற்போது உத்ரா என்ற பக்தி படத்தில் அம்மன் சாமியாக நடிக்கவுள்ளாராம். உச்சகட்டம், நெல்லை சந்திப்பு படங்களை இயக்கிய நவீன் கிருஷ்ணா படத்தை இயக்குகிறாராம்.

Blogger இயக்குவது.