என் வாழ்கையை அழித்த டாப் நட்சத்திரங்கள் - பரபரப்பை கிளப்பிய நடிகை ஷகிலா..!


கவர்ச்சி நடிகை ஷகீலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

"ஷகீலா - நாட் எ பார்ன் ஸ்டார்' என்ற பெயரில் உருவாகும் படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலா ரோல் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் பெரிதாக எந்த பரபரப்பும் ஏற்படுத்தவில்லை.

இதனால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை என சினிமா துறையில் பேச்சு அடிபட்டது. அதனால் படத்தின் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஷகீலா அளித்துள்ள ஒரு பேட்டியில், "என் வாழ்க்கையை அழித்த பல டாப் நட்சத்திரங்களின் பெயர்களை இந்த படத்தின் மூலம் வெளியிடப்போகிறேன்" என கூறியுள்ளார்.

இதனால் ஷகீலா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் பற்றி படத்தில் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
Blogger இயக்குவது.