முதல் வார முடிவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்..!
பொதுவாக பண்டிகையல்லாத நாட்களில் வெள்ளிகிழமை படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ரிலீஸ் நாள் மற்றும் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் என மொத்தம் மூன்று நாட்கள் 50% அரங்கம் நிரம்ப வாய்ப்புள்ளது என்பதால் இதனை தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.
எந்த பட எப்படி இருந்தாலும் இந்த மூன்று நாட்களில் ஓரளவுக்கு வசூல் செய்துவிடும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், அதே வேளையில் நல்ல கதை மற்றும் திரைக்கதை அமைந்துவிட்டால் போதும் ரசிகர்களே அந்த படத்தை எங்கோ கொண்டு சென்று விடுவார்கள்.
அந்த வகையில் நிறைய சிறு பட்ஜெட் படங்கள் பல மடங்கு லாபம் கொடுத்துள்ளன.ஆனால்,பல நேரம் பெரிய பட்ஜெட் , பெரிய ஹீரோ படங்கள் கூட புஸ் ஆகிவிடுவதும் உண்டு.
இந்நிலையில், சென்னை ஏரியாவில் மற்றும் முதல் வார முடிவில் அதிக வசூல் செய்த படம்
எது..? எந்த ஹீரோ நடித்தது..? என்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.
- 2.0 : ரூ 13.64 கோடி
- சர்க்கார் : ரூ 11.23 கோடி
- பேட்ட : ரூ 8.75 கோடி
- காலா : ரூ 8.24 கோடி
- விஸ்வாசம் : ரூ 6.9 கோடி
- செக்க சிவந்த வானம் : ரூ 5.83 கோடி
- விஸ்வரூபம் 2 : ரூ 4.78 கோடி
- தானா சேர்ந்த கூட்டம் : ரூ 4.34 கோட
- காஞ்சனா 3 : ரூ 4.22 கோடி
- NGK : ரூ 4.21 கோடி