ஏன் 24-ம் புலிகேசி படத்தில் இருந்து விலகினேன் - வைகைப்புயல் கூறிய அதிர்ச்சி காரணம்..???


என் கைவசம் பத்துப் படங்கள் இருக்கின்றன; ஆனால், என்னால் நடிக்க முடியவில்லை என, காமெடி நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார். இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு, திடுமென விலகியதால், அந்தப் படத்தை தொடர முடியவில்லை. இதனால், இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

வடிவேலு, நடிக்க வர மறுக்கிறார் என ஷங்கர் புகார் அளிக்க, வடிவேலுவுக்கு தகவல் அனுப்பி, அவரை விசாரணைக்கு அழைக்கிறது தயாரிப்பாளர் சங்கம். ஆனால், அதையெல்லாம் தூக்கி ஓரம் போட்டு விட்டார் வடிவேலு. இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

படங்களில் ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், ஆக்ஷனையும், காமெடியையும் இணைத்துப் பார்த்து, அதன்படி என்னை இம்சை அரசன் 24ம் புலிகேசியில் நடிக்கச் சொன்னார்கள் நான் மறுத்து விட்டேன். படத்தில், மூன்று கேரக்டர்களில் நான் நடிக்கிறேன். அப்படி இருக்கும் போது, என்னுடைய யோசனைகள் இல்லாமல், துளி கூட படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வாய்ப்பே இல்லை.

படத்தில் கூட யாரையும் கொல்வதற்கு விட மாட்டேன். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் என்னுடைய மாமாவாக நடித்திருப்பார் நாசர். அவரை படத்துக்காக நான் கொல்ல வேண்டும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், அதை செய்ய நான் மறுத்து விட்டேன். வேறு காட்சி படமாக்கப்பட்டது. இப்படி, சினிமாவில் கூட யாருக்கும் துன்பம் இழைக்கக் கூடாது என நினைக்கும் நான், நிஜத்தில் யாரும் கெட்டுப் போக வேண்டும் என்று நினைப்பேனா...

24ம் புலிகேசி படம் தொடர்பாக, வாங்க பேசலாம் என நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை கூப்பிடுகிறது. நான் ஏன் செல்ல வேண்டும்? என்னப் பிரச்னை என்றாலும், தயாரிப்பாளரோ, இயக்குநரோ என்னிடம் நேரில் பேசித்தானே சரி செய்ய முடியும். என் கையில் இப்போது பத்து படங்கள் உள்ளன. ஆனால், இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை நடிக்க விடாமல் நெருக்கடி கொடுத்து, என்னை முடக்கி உள்ளனர்.

இவ்வாறு வடிவேலு கொந்தளிக்கிறார்.
Powered by Blogger.