42 வயதில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ள அஜித் பட நடிகை..! - இவர் தான் மாப்பிள்ளை..!


தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை பூஜா பத்ரா. இவர், நடிகர் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

இவருக்கு இப்போது 42 வயது ஆகின்றது. இவருக்கும், டாக்டர் சோனு அலுவாலா என்பவருக்கும் கடந்த 2002 ல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் வசித்து வந்த இவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010 விவாகரத்து செய்தனர். 

அதன் பிறகு, தனது தாய்நாடான இந்தியாவிற்கே வந்துவிட்டார் பூஜா பத்ரா. இப்போது, பிரபல ஹிந்தி நடிகர் நவாப் ஷா-வுடன் நெருக்கமாக இருக்கும் இவர் அவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் சுற்றி வந்தன. 

தற்போது இதனை உறுதிசெய்துள்ளது நடிகர் நவாப் ஷாஜா வெளியிட்டுள்ள புகைப்படம். இன்ஸ்டாகிராமில் அவர் அதில் உன்னைப்போல் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46 வருடங்கள் ஆகி விட்டது என கூறியுள்ளார். 

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள் என்று கூறுகிறார்கள். நவாப் ஷாஜா தமிழில் கஜேந்திரா, போஸ் மற்றும் யான் என மூன்று படங்களில் நடித்துள்ளார். 

நீச்சல் குளத்தில் நவாப் ஷா-வுடன் கும்மாளம் போட்ட பூஜா பத்ரா வின் புகைப்படம் இதோ,

Blogger இயக்குவது.