தமிழ் அகராதிலேயே இல்லாத தளபதி 63 தலைப்பு..! - என்ன காரணம்..?
தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதனை தொடர்ந்து, விஜய் பிறந்தநாள் ஜூன் 22 அன்று இப்படத்தின் தலைப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது, அவரின் பிறந்தநாளுக்கு முன்பாகவே படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என தெரிகிறது.
இதற்கிடையே இப்படத்திற்கு "பிகிலு" என பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அகராதியிலேயே இல்லாத சொற்களான தெறி, மெர்சல் என்பதை தொடார்ந்து. மீண்டும், தமிழ் அகராதியில் இல்லாத "பிகிலு" என்றே அட்லீ தலைப்பு வைப்பார் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஏன் இப்படி அகராதிலேயே இல்லாத சொற்களை தேடிப்பிடித்து தலைப்பாக வைக்கிறார் என்று ஏழு ஸ்வர நாயகன் இயக்குனர் அட்லியை தான் கேட்கவேண்டும்.