வாவ்..! - தளபதி 63 படத்தின் இந்த பிரமாண்ட செட் புகைப்படத்தை பார்த்தீர்களா..? - அசத்துராய்ங்களே..!


அட்லீயின் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் விவேக், யோகிபாபு, பரியேறும் பெருமாள் கதிர் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாவதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்சமயம் EVP Flim City யில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்ட கால்பந்து செட் போடப்பட்டுள்ளது. இந்த கால்பந்து ஸ்டேடியத்துடன் தற்போது அதன் அருகே நடைபெற்று வரும் இளையராஜாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
Powered by Blogger.