பைரவா போலவே இணையத்தில் கசிந்தது "தளபதி 63" ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் - இதோ புகைப்படம்


நடிகர் விஜய்-யின் பிறந்த நாள் நாளை, 22ம் தேதி, கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரின் ரசிகர்களுக்கு இன்று மாலை, அறுசுவை விருந்து படைக்கிறது 'தளபதி 63' படக்குழு. 

இன்று மாலைதான் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவிருந்தது. ஆனால், பைரவா படத்தின் போஸ்டர் இணையத்தில் கசிந்தது போலவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் கசிந்து விட்டது.படத்தின் தலைப்பு பிகில் என்று அந்த போஸ்டர் மூலம் தெரிகின்றது.

அட்லி இயக்கத்தில் ஏற்கனவே, தெறி மற்றும் மெர்சல், மெகா ஹிட்டடித்த நிலையில், இப்போ, 3வது ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துள்ளது ரசிகர் பட்டாளம். 

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தளபதி 63 முதல் லுக் போஸ்டர் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. சூட்டோடு, நாளை 22ம் தேதி, 2வது லுக்கையும் வெளியிடப்போவதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படத்தோட டீம். 

இனணையத்தில் வெளியான அந்த போஸ்டர் இதோ,


Blogger இயக்குவது.