தளபதி 63 பாடல்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!


விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தின் வியாபாரத்தை இப்போதே தொடங்கிவிட்டது தயாரிப்பு நிறுவனம்.

விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் பெயர் மற்றும் முதல் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விட்டது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கிட்டதட்ட 50 கோடி ரூபாய்க்கு சன் டீவி கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை விஜய் படத்திற்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடி திரையரங்க உரிமைகளையும் கிட்டதட்ட 75 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்குப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் ஆடியோ உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமைகளையும் விற்பதற்கான முயற்சிகளும் மும்முரமாக ஆரம்பமாகியுள்ளனர். இந்த விற்பனைகளின் மூலமே இப்போதே தளபதி63 படத்தின் பட்ஜெட்டை விட அதிக லாபம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் பாடல்கள் உரிமத்தை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது என்ற தகவல் காலை முதலே வளம் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரே அதனை சற்று முன்பு உறுதிபடுத்தியுள்ளார்.
Blogger இயக்குவது.