தளபதி 63 : தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் - வெளியான தகவல் - கொண்டாடத்தில் ரசிகர்கள்
நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து மூன்றாவதாக ஒரு தமிழ் படம் எடுத்து வருகின்றனர். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தற்காலிகமாக தளபதி 63 என பெயர் சூட்டப்பட்டு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர் தவிர, யோகி பாபு, ஆனந்தராஜ், இந்துஜா, டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
பெண்கள் கால்பந்து போட்டிகளை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்தப் படத்தில், நடிகர் விஜய் இரு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்தமாதம் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்கிறார்கள். இதற்கு முன் அழகிய தமிழ் மகன், கத்தி, மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் நடிகர் விஜய், இரு வேடங்களில் நடித்திருக்கிறார்.
படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் வருகிற ஜூன் 21ம் தேதி மாலை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே சமூக வளைத்தளங்களில் ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.