நான்கு நாட்கள் முன்கூட்டியே ரிலீஸ் ஃபர்ஸ்ட்லுக் - தளபதி63 படக்குழுவுக்கு விஜய் அறிவுறுத்தல்


AGS Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி-63' படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. 

இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதால் படவேலைகள் படு விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிடுவதற்கு பதிலாக 4 நாட்கள் முன்னதாக ஜூன் 18 அன்றே வெளியிட இருப்பதாககூறுகிறார்கள்.

நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Blogger இயக்குவது.