தளபதி 64 படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் ரிலீஸ் தேதி..! - செம்ம ஸ்பீடு..!


விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. அட்லீ இப்படத்தை விளையாட்டு மையப்படுத்திய கதையாக எடுத்து வருகிறார்.

கண்டிப்பாக இப்படம் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தான் விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு தகவல்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த படத்தின் கதையை கூறியவுடன் சற்றும் யோசிக்காமல் நடிகர் விஜய் ஓ.கே சொல்லியிருகிறார். விஜய் நடித்த படங்களிலேயே இந்த படத்தின் திரைக்கதை தான் செம்ம ஸ்பீடாக இருக்கும் என கூறுகிறார்கள்.

தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 2ம் வாரத்தில் தொடங்கி 2020 ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
Blogger இயக்குவது.