" வானில் இருள் சூளும் போது " - வெளியானது நேர்கொண்ட பார்வை சிங்கிள் ட்ராக்..! - இதோ வீடியோ


பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் "பிங்க்". இந்தப் படம் தற்போது "நேர்கொண்ட பார்வை" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். 

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில், இந்த படத்திலிருந்து வானிருள் என்ற சிங்கிள் ட்ராக் பாடல் இன்று வெளியாகும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சற்று முன் இந்த பாடல் வெளியானது. 

இதோ வீடியோ,
Powered by Blogger.