ஆமா... இந்த ஆனந்த கண்ணன் என்ன ஆனாரு..? இப்போ என்ன பண்றாரு தெரியுமா..?
பிரபலம் ஆக வேண்டுமா..? இன்று யூ-ட்யூப், பேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் என கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் இணையவழி சமூக வலைத்தளங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
இதனால், மூலை முடுக்கில் உள்ளவர்கள் கூட ஃபேமஸ் ஆகி விடுகிறார்கள். அதுவும், ஜியோ வந்த பிறகு சொல்லவே தேவையில்லை.
ஆனால், இதெல்லாம் இல்லாத காலகட்டத்திலேயே சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு பிரபலமானாவர் இந்த ஆனந்த கண்ணன். இவர் தாய்மொழி தமிழ். ஆனால், வசிப்பது சிங்கப்பூர். ஆரம்ப கால கட்டத்தில் ரேடியோ RJ-வாக இருந்த இவர் தொடர்ந்து சன் மியூசிக்கில் VJ-வாக வாய்ப்பை பெற்றார்.
அதன் தொடர்ச்சியாக சீரியல், சினிமா என தலை காட்டினார். வளர்ந்த வந்த அதே வேகத்தில் காணமால் போய்விட்டார். ஆம், குடும்பம் குழந்தைகள் என சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார் ஆனந்த கண்ணன். இவருக்கு, ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது.
இவர் இப்போது ஆரம்ப காலத்தில் முதன் முதலில் பணியாற்றிய வசந்தம் தொலைகாட்சியில் VJ-வாக இப்போது பணியாற்றி வருகிறார். சவால் சிங்கப்பூர் மற்றும் ஊர்க்குருவி என இரண்டு ரியாலிட்டி ஷோ-க்களை இப்போது நடத்தி வருகிறார்.