அவனுக்கு ஒன்றுமே தெரியாது - விஜய் பட இயக்குனரை ஒருமையில் பேசிய நடிகர் வடிவேலு..!
வடிவேலு இன்று மீம்ஸ் உலகின் ராஜா. இவர் இல்லாமல் எந்த ஒரு மீம்ஸுமே இன்று இல்லை. அப்படியிருக்க இவர் எப்போது மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆவார் என பல லட்ச ரசிகரக்ள் காத்திருக்கின்றனர்.
அப்படியிருக்க வடிவேலு நேசமணி காமெடி ட்ரெண்ட் ஆனது எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்நிலையில் வடிவேலு தற்போது ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் இம்சை அரசன், அறை என் 365-ல் கடவுள், விஜய் நடித்த புலி ஆகிய படங்களை இயக்கிய சிம்புதேவனை மிக மோசமான 'அவனுக்கு ஒன்றுமே தெரியாது, நான் தான் அனைத்தும் நடித்தேன்' என ஒருமையில் பேசியுள்ளார், இது அனைவருக்குமே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.