நடிகர் சங்க தேர்தல் : விஷாலுக்கு எதிராக களத்தில் குதித்த பிரபல நடிகர்..!


நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. நாசர்-விஷால் பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், அவர்களுக்கு போட்டியாக யார் நிற்பது என பெரிய கேள்வி இருந்தது.

தற்போது நடிகர் பாக்கியராஜ் பாண்டவர் அணிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் நடிகர் உதயா ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
Powered by Blogger.