நீட் தேர்வை தடை செய் என்று பொங்கிய பா.ரஞ்சித்தை பொழந்து கட்டும் தமிழக இளைஞர்கள்..!


தமிழகம் முழுக்க தற்போது இளம் தலைமுறைகள் மட்டுமல்ல பல பெற்றோர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காரணம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே போல தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சோகம் சூழ்ந்துள்ளது.

அண்மையில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. சென்ற ஆண்டை விடவும் இந்த ஆண்டு கூடுதலாக 9 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மொத்தம் 49 சதவிகித மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
ஏற்கனவே, சென்ற வருடம் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருகிறார்கள்.

அரசியல் கட்சிகள் வழக்கம் போல கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது, இளைஞர்களை தூண்டி விடும் விதமாக பிரபல இயக்குனர் ரஞ்சித் தற்போது நீட் தேர்வை எதிர்த்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த தமிழக இளைஞர்கள் இந்த தூண்டி விடுற வேலையெல்லாம் வேண்டாம். தேர்வில் தோல்வி அடைந்ததற்கு தற்கொலை தான் முடிவு என்றால் தேர்வுகளே இல்லாமல் போய் விடும். இளைஞர்களை தவறாக வழிநடத்தாதீர்கள் என்று பா.ரஞ்சித்திற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.







Powered by Blogger.