இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் - இவர் தான் மணப்பெண்..!


பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது முதல் மனைவியான அமலாபாலை இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தார். இந்நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். 

இவர் சினிமா தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இரண்டாவது மகன் ஆவர். நடிகர் அஜித்தின் ‘கிரீடம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து,‘மதராசபட்டினம்’, ‘தெய்வ திருமகள்’,’தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உட் பட பல படங்களை இயக்கினார். 

இப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை ’தலைவி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ படங்களில் ஹீரோயினாக நடித்த அமலாபால் மீது காதல் ஏற்பட்டு காடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

Blogger இயக்குவது.