சிகிச்சை முடிந்து வீடு திரும்பிப மணிரத்தினம் - தற்போது என்ன செய்கிறார் பாருங்க - புகைப்படம் உள்ளே


தமிழ் சினிமாவின் அடையாளம் எனப்படும் பிரபலங்களில் இயக்குனர் மணிரத்தினமும் ஒருவர். இவருடைய படங்கள் வெற்றியோ, தோல்வியோ. ஆனால், இவருடைய படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் உண்டு. 

இன்னும் சொல்லபோனால் மணி சார் படங்களை மட்டும் தான் தியேட்டரில் பார்ப்பேன் என சொல்லும் ரசிகர்களும் உண்டு. திரையுலகினரால் மணி சார், மணி சார் என்று பாசமோடு அழைக்கப்படும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் பரவியது. 

ஆனால், அவரது மனைவி பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. இது வெறும் சாதரணமான உடல் பரிசோதனை தான் என்று ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து திரும்பிய மணிரத்தினம் ஈஷா யோக மையத்தில் நிறுவனரும், சமூக சேவகருமான ஜக்கி வாசுதேவ்-வுடன் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 


Powered by Blogger.