கல்வெட்டு மட்டும் அப்படி இருந்தால்.. நானே கடப்பாறையை வைத்து உடைத்து விடுவேன் - மிரட்டு ஆனந்த் ராஜ்
நடிகர் ஆனந்த் ராஜ் கல்வெட்டு மட்டும் அப்படி இருந்தால் நானே கடப்பாறையை கொண்டு உடைத்து விடுவேன் என்று மிரட்ட விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், இப்போது தென்னிந்திய நடிகர் சங்கம் அவர்களது பயன்பாட்திற்கு மற்றும் வாடகை விடுவதற்கு என்று தனியாக கட்டடம் ஒன்றை ஒன்றை கட்டி வருகிறார்கள். கிட்டதட்ட 50 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறுக்கில் வந்து விழுந்தது. இதனால் கட்டடப்பணிகள் பாதியில் நிற்கின்றன.
இதனை தொடர்ந்து, நடிகர் ஆனந்த் ராஜ் ஒரு பேட்டியில், எந்த அணி ஜெயித்தாலும் நடிகர் சங்க கட்டிடத்தை தொடார்ந்து கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.