சூர்யா, சிவா இணையும் புதிய படம் எப்போது ஆரம்பமாகின்றது தெரியுமா..?


'தர்பார்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு ரஜினிகாந்த் கிளம்புவதற்கு முன்பாக அவரை இயக்குனர் சிவா சந்தித்துப் பேசினார். உடனே ரஜினிகாந்த், சிவா இணைந்து ஒரு படம் செய்ய உள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால், சிவா தரப்பில் மரியாதை நிமித்தமாகத்தான் அவர் ரஜினிகாந்தை சந்தித்தார்கள் என்றார்கள். சென்னை சாலிகிராமத்தில் இருந்த அருணாச்சலம் ஸ்டுடியோ குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் சிவா. அங்கு ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட சிவா, சூர்யா நடிக்க உள்ள படத்தை ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யா தற்போது சுதா கோங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சண்டிகரிலும் நடந்திருக்கிறது. அங்கிருந்து திரும்பியுள்ள சூர்யா, சிவா படத்திற்கான டிஸ்கஷனிலும் இடம் பெறலாம் என்கிறார்கள்.

'என்ஜிகே' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் சூர்யா அடுத்து அவர் நடிக்க உள்ள படங்களின் கதைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளாராம். மீண்டும் ஒரு தோல்வி தனக்கு வரக் கூடாது என்பதில் அவர் எச்சரிக்கையாக உள்ளார் என்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள பல தியேட்டர்களில் 'என்ஜிகே' படம் இன்றே கடைசி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Powered by Blogger.