நடிகர் சங்க தேர்தலில் நடிகை குஷ்பு..! - என்ன பதவிக்கு போட்டியிடுகிறார்..??


2019- 2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்தவிருக்கிறார்.

விஷால் அணியும், சரத்குமார் அணியும் மோதிய கடந்த தேர்தலில் தமிழ் நடிகர்கள் இரண்டு அணியாக பிரிந்து இருந்தார்கள். இந்த தேர்தலில் நாசர் தலைவராகவும்,விஷால் செயலாளராகவும், கார்த்தி பொருளாளரகவும் வெற்றி பெற்று பதவியேற்றார்கள்.

அப்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள பலவற்றை நிறைவேற்றி இருந்தாலும் இன்னும் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. இந்த முறை விஷால் அணிக்குள்ளாக நிறைய பிரச்சனைகளும், அதிருப்தியும் ஏற்பட்ட நிலையில் அந்த அணி மீண்டும் களமிறங்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

தற்போது நடிகர் சங்க தேர்தலில் களம் காணும் விஷால் அணியின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஆச்சர்யம் கொள்ளும் விதமாக குஷ்புவின் பெயர் வெளியாகியுள்ளது. கடந்த முறை அவர் விஷாலுக்கு ஆதரவாக இருந்தாலும் சரத்குமார், ராதிகாவிற்கு எதிராக களமிறங்கவில்லை. இம்முறை அவர் செயற்குழு பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் விஷால் அணி சார்பில் போட்டியிடவுள்ளவர்களின் பெயர் லிஸ்ட் இதோ...

தலைவர்- M. நாசர்

துணை தலைவர்கள்- பூச்சிமுருகன், கருணாஸ்.

பொது செயலாளர்- விஷால்,

பொருளாளர்- கார்த்தி

செயற்குழு உறுப்பினர்கள்:
1. ஸ்ரீமன்
2. பசுபதி
3. ரமணா
4. நந்தா
5. தளபதி தினேஷ்
6. சோனியா போஸ்
7. குட்டி பத்மினி
8. கோவை சரளா
9. பிரேம்
10. ராஜேஷ்
11. மனோபாலா
12. ஜெரால்டு
13. காளிமுத்து
14. ரத்னாப்பா
15. M.A.பிரகாஷ்
16. அஜய் ரத்தினம்
17. பிரசன்னா
18. ஜூனியர் பாலய்யா
19. ஹேம சந்திரன்
20. குஷ்பூ
21. லதா
22. நிதின் சத்தியா
23. பருத்திவீரன் சரவணன்
24. ஆதி
25. வாசுதேவன்
26. காந்தி காரைக்குடி
Blogger இயக்குவது.