இது தரங்கெட்ட செயல் - வீடியோவை வெளியிட்ட விஷால் - வெளுத்துகட்டிய நடிகை வரலக்ஷ்மி..!



நடிகர் சங்க தேர்தல் அடிதடி தொடங்கிவிட்டது. பாண்டவர்அணி பாக்யராஜ் அணி என இரண்டு அணிகள் தேர்தலில் களம் காணுகின்றன. 

இந்நிலையில், பாண்டவர் அணி சார்பில் ஒரு வீடியோ தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் சங்கத்தில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர் பாண்டவர் அணியினர். 


இதனை பார்த்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். விஷாலை வெளுத்து கட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் " நீங்கள் மிகவும் தரங்கெட்ட முறையில் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவால் உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது. எனது அப்பாவின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல் நீங்கள் இப்படி பேசுவது வருத்தமாக உள்ளது. 

சட்டத்தை மதிப்பதாக கூறுகிறீர்கள். அதே சட்டத்தில் தான் ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்று கூறப்பட்டுள்ளது. எனது அப்பா குற்றவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் அவர் தண்டனை பெற்றிருப்பார். இந்த வீடியோ உங்களுடைய தரத்தை வெளிப்படுத்தியுள்ளது. உங்களைச் சொல்லி குற்றமில்லை. உங்களது வளர்ப்பு அப்படி.

நீங்கள் புனிதர் போல நடந்துகொள்ள வேண்டாம். நீங்கள் புனிதராக இருந்திருந்தால் பாண்டவர் அணியில் இருந்திருந்தவர்கள் உங்களை விட்டு சென்றிருக்கமாட்டார்கள். புதிய அணியும் தோன்றியிருக்காது.

Blogger இயக்குவது.