வரலட்சுமியை தொடர்ந்து "புளுகு மூட்டை" என விஷாலை வெளுத்து கட்டிய பிரபல நடிகை..!

 
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. இதில் நடிகர் நாசர் தலையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகிறது. 
 
இந்நிலையில், பாண்டவர் அணி சார்பில் நடிகர் விஷால் வெளியிட்ட ஒரு பிரசார வீடியோவில், நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவியால் நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் பல தவறுகளை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதையடுத்து நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, விஷாலுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை காட்டினார். இந்நிலையில், நடிகை ராதிகா "உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது, சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?’’ என்று விஷாலை கேட்டுள்ளார்.
 
இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
Blogger இயக்குவது.