துளி மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட கரீனா கபூர்..! - வயசு தெரியுது மேடம் என கலாய்க்கும் ரசிகர்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக சம்பளம் பெறும் பெண் நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகை கரீனா கபூர்.
‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ என்ற ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் நடுவராகத் தோன்றவுள்ளார் கரீனா. 38 வயதான கரீனாவுக்கு, இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண் நட்சத்திரங்களுக்கு வழங்கப்படாத அளவு சம்பளம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட இவர். அவ்வப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது அவர் துளிகூட மேக்கப்போடாமல் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள், " வயசு தெரியுது மேடம்" என்று கலாய்த்து வருகிறார்கள்.