விஜய், சூர்யா பற்றி கேட்டதற்கு வடிவேலு பாணியில் பதிலளித்த சாய் பல்லவி..!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து சாய்பல்லவி நடித்துள்ள என்ஜிகே படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவின் மனைவியாக நடித்துள்ள சாய்பல்லவியின் நடிப்பு குறித்து இரண்டு விதமான கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ரசிகர்களிடம் என்ஜிகே படம் குறித்து கருத்து கேட்கும் விதத்தில் ஆஸ்க் சாய்பல்லவி என்ற ஹேஷ்டேக் மூலம் கலந்துரையாடினார் சாய் பல்லவி.
அப்போது அவரிடத்தில் ரசிகர்கள் விஜய், சூர்யா பற்றி கருத்து கேட்டபோது, விஜய்யை கவர்ச்சிகரமானவர் என்றும், சூர்யாவை விசித்திரமானவர் என்றும் ஒரே வார்த்தையில் பதில் கொடுத்தார் சாய் பல்லவி.