"இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது" - இரண்டாவது திருமணம் குறித்து நடிகர் விஷ்ணு ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்..!


நடிகர் விஷ்ணு விஷால் சில நாட்களுக்கு முன்பு பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுத்த சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். 

அதை பார்த்த பலரும் இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர் என்றும் விரைவில் திருமணம் என்றும் கிசுகிசுக்க துவங்கினர்.

இந்நிலையில் இது பற்றி விஷ்ணு ஒரு பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

"நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பழகி வருகிறோம். எங்களுக்கு பொதுவான நண்பர்களும் பலர் இருக்கின்றனர். அவர்கள் உடன் அதிக நேரம் செலவிடுவோம். எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது. மற்ற விஷயம் (காதல்) பற்றி பேச இது சரியான நேரம் இல்லை. இருவருக்கும் தொழில் ரீதியான பொறுப்புகள் பல உள்ளது" என விஷ்ணு தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.